இராட்ச கௌராமி

தமிழ்ப்பெருங்களஞ்சியத் திட்டம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இராட்ச கௌராமி, இம்மீனானது தெற்கு ஆசியாவை இருப்பிடமாக கொண்டது. நாட்டின் சில பகுதிகளில் இம்மீனை உணவுக்காகவும் பயன்படுத்துகின்றனர். இம்மீன் பார்ப்பதற்கு அழகாக இருத்தல் வண்ண மீனாகவும் பயன்படுத்தப்படுகிறது. இம்மீன் பெரும்பாலும் ஏரி, குளம், குட்டையில் வளரக்கூடியது. இம்மீன் அதிகப்படியாக 70 செ.மு வரை வளரக்கூடியது. நீர்நிலைகளில் உள்ள புழு, புச்சிகளை உணவாக உட்கொள்ளும். நாம் அளிக்கக் கூடிய குருணை உணவையும் உண்ணக் கூடியது. இவ்வகை மீனானது பொன் நிறத்தில் மற்றும் வெண்மை நிறத்திலும் காணப்படும். இம்மீன் வளர மற்றும் இனப்பெருக்கம் செய்ய நீரின் கார அமிலத்தன்மையானது 6-7.5 வரை இருத்தல் சிறந்தது. இம்மீன் இனப்பெருக்க விகிதம் 1:1 ஆகும். இராட்ச கௌராமியானது இன முதிர்ச்சியடைய 8-12 மாதங்கள் ஆகும். பெண் மீன்கள் குறைந்தபட்சம் 1000 முட்டைகள் முதல் 2000 முட்டைகள் வரை இடும். இனமுதிர்ச்சி அடைந்த ஆண் மீனானது நீர் குமிழிகளை சுரந்து நீரின் மேற்பரப்பில் நுரை கொண்டு வலை அமைக்கும். பெண் மீன்களிலிருந்து வரப்பட்ட முட்டைகளை ஆண் மீன்கள் சேகரித்து நரைக்குள் சேர்த்து வைக்கும். இம்முறையில் இனப்பெருக்கம் நடைபெறும்.

"http://www.tamilkalanjiyam.in/index.php?title=இராட்ச_கௌராமி&oldid=74752" இருந்து மீள்விக்கப்பட்டது