மாற்றங்கள்

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

கமலம்.எம்.கே

4,291 பைட்டுகள் சேர்க்கப்பட்டது, 11:12, 15 செப்டம்பர் 2017
"==கமலம்.எம்.கே== இவர் சிறந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
==கமலம்.எம்.கே==
இவர் சிறந்த இசை நாடக நடிகை. மதுரையில் 5.4.1918 இல் பிறந்தார். தந்தையார் திரு. முத்துக் கிருட்டிணன் தாயார் திருமதி கண்ணா மணி அம்மாள்.
இவர் தமது பத்தாம் வயது தொடங்கி மூன்று ஆண்டுகள் டி.கே.சுந்தர வாத்தியாரிடம் முறையாக நாடகக் கலை பயின்று புளியம்பட்டி சுப்பாரெட்டியார் கம்பெனி, கலைமாமணி எ.ஆர். சானகி அம்மாளின் நாடகக் கம்பெனி, கிடம்பாச்சாரி சாமன்னா அய்யரின் நாடக்குழு, சாரதாம்பாள் நாடகக் கம் பெனி ஆகிய நாடகக் குழுக்களில் பணியாற்றி அக்குழுக்களின் நாடகங்கள் பலவற்றில் நடித்துள்ளார்.

மலேசியா சிங்கப்பூர் முதலிய நாடுகளுக்குக் கலைப் பயணம் மேற்கொண்ட இவர் அங்கு பிரபல நடிகர் பி. எசு. கோவிந்தனோடு இணைந்து பல நாடகங்களில் நடித்து அந்நாட்டு மக்களின் பாராட்டுதல்களைப் பெற்றதுடன் தங்கப் பதக்கங்களையும் நற்சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.
நாடக நடிகை என்பதோடு நில்லாது எம்.கே. தியாகராச பாகவதர், பி.யு.சின்னப்பா, கலைவாணர் என்.எசு. கிருட்டிணன், காளி என். இரத்தினம் ஆகியோருடன் இணைந்து திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் சிறந்த நாடகப் பயிற்று நராகவும் விளங்கி வசுந்தரா, விசயலெட்சுமி, என்ற இரு நடிகைகளுக்குப் பயிற்சி அளித்துள்ளார்.
சிறந்த பாடகியான இவர் முருகன் மீது பல பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார். திரைப்படத்துறையில் ஏ.வி.எம். ஒடியன் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் வெளியிட்ட பல திரைப்பட இசைத்தட்டுகளில் இவர் பாடியுள்ளார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாடகக் கலைக்குப் பணியாற்றி வரும் இவரது நாடகத் தொண்டினைப் பாராட்டும் பகையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இவருக்குக் கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.

[[பகுப்பு: நாடகக் களஞ்சியம் தொகுதி ஒன்று]]
[[பகுப்பு:தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் நூல்கள்]]
[[பகுப்பு:முதற் பதிப்பு 1994]]

==அடிக்குறிப்பு==
நாடகக் களஞ்சியம் தொகுதி ஒன்று - பக்.464

கட்டுரையாளர் – பெ.கோ.
11,112
தொகுப்புகள்
"http://www.tamilkalanjiyam.in/index.php/சிறப்பு:MobileDiff/171120" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி