மாற்றங்கள்

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

கமலம் . டி. எசு

3,378 பைட்டுகள் சேர்க்கப்பட்டது, 11:14, 15 செப்டம்பர் 2017
"==கமலம் . டி. எசு== சிறந்த இச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
==கமலம் . டி. எசு==
சிறந்த இசை நாடக நடிகையான திருமதி டி.எசு. கமலம் தஞ்சாவூரில் 10.9.1908 இல் பிறந்தார். இவரின் தந்தை திரு. டி.எசு. செளந்திரராசன், அன்னை திருமதி. துளசியம்மாள். இளமையிலேயே நாடகக் கலையார்வத்தால் 10 ஆம் வயதிலேயே நடிக்கத் தொடங்கிய இக்கலைஞர் சங்கரதாசு சுவாமிகளின் தத்துவமீனலோசனி வித்துவ பாலகான சபாவில் சேர்ந்து புகழ் பெற்ற நடிகர்களான திருவாளர்கள் தி.க. முத்துசாமி, அவ்வை தி.க. சண்முகம், முதலானவர்களுடன் நடித்துப் புகழ் பெற்றார். தொடர்ந்து மதுரையில் இசை நாடகம் என்று கூறப்படும் சிறப்பு (ஸ்பெஷல்) நாடகங்களில் திருவாளர்கள் எம்.சி.நடராசப்பிள்ளை, எசு.எசு. விசுவநாததாசு, கே.எசு.செல்லப்பா அய்யர், எசு.எசு. தாமோதரதாசு, எம்.ஆர். நாகராச பாகவதர், கே.பி. சுந்தரம்பாள், எசு.டி.சுப்புலட்சுமி, எசு.ஆர்.சானகி அம்மாள் ஆகியோருடன் நடித்துள்ளார். கலைவாணர் என்.எசு. கிருட்டிணனுடன் நாடகத்தில் மட்டுமல்லாமல் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

மதுரை சந்தான கிருட்டிண சபாவில் 10 வருடங்களுக்கு மேல் நடித்து வந்துள்ளார். இசையில் வல்ல இக்கலைஞரின் பாடல்கள் கிராமபோனில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவரின் இசைநாடகப் பணியைப் பாராட்டித் தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் கலை மாமணி விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.


[[பகுப்பு: நாடகக் களஞ்சியம் தொகுதி ஒன்று]]
[[பகுப்பு:தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் நூல்கள்]]
[[பகுப்பு:முதற் பதிப்பு 1994]]

==அடிக்குறிப்பு==
நாடகக் களஞ்சியம் தொகுதி ஒன்று - பக்.465

கட்டுரையாளர் – சி.ந.
11,112
தொகுப்புகள்
"http://www.tamilkalanjiyam.in/index.php/சிறப்பு:MobileDiff/171121" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி