மகரந்த சேர்க்கையை ஊக்குவித்தல்

தமிழ்ப்பெருங்களஞ்சியத் திட்டம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

விதைப் பிடிப்புத் தன்மையை அதிகரிக்க அயல் மகரந்த சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். சுமார், 20 சதம் பூ வெளிவந்த பின்பு தொடர்ந்து 10 நாட்களுக்கு கயிறு இழுத்தல் அல்லது குச்சி கொண்டு ஆண் இரகத்தை அசைத்து மகரந்தச் சேர்க்கையை ஊக்குவிக்க வேண்டும். காலை 10 மணி முதல் 11 மணி வரையிலும் மற்றும் மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் இதனைச் செய்யலாம்.

பொதுவாக, பெண் வரிசைகளில் -10 லிருந்து 20 சதம் வரை விதை பிடிக்கும். ஜிப்ரலிக் அமிலம் தெளிப்பதாலும் மகரந்தச் சேர்க்கையை ஊக்குவிப்பதாலும் விதை பிடிப்பை 60 சதம் வரை அதிகரிக்க முடியும்.