வளைப்பலகைக்கலப்பை

தமிழ்ப்பெருங்களஞ்சியத் திட்டம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

வளைப்பலகை, கொழுமுனை, சால் சுவறின் மீது செல்லும் பாகம் ( நிலப்பக்கப்பகுதி) இணைக்கும் தண்டு/ இணைப்புச் சட்டம், பிராக்கட் (Bracket) மற்றும் கைப்பிடி போன்ற பாகங்களை வளைப்பலகைக் கலப்பை கொண்டுள்ளது. இவ்வகைக் கலப்பையில் சால்கள் நேர்த்தியாக அமைவதோடு நன்றாக மண் புரட்டப்படுகிறது. அனைத்துப் பகுதியும் உழவு செய்யப்படுகிறது. மாடகளினால் உழுவதற்கு பயன்படுத்தப்படும் வளைப்பலகை கலப்பை சிறியதாக 15 செ.மீ ஆழம் வரை உழக்கூடியதாக இருக்கம். டிராக்டரில் இணைக்கப்படும் வளைப்பலகை கலப்பை 2 கலப்பைகளை கொண்டது மற்றும் இது 25 முதல் 30 செ.மீ ஆழம் வரை உழுவக்வடியது வளைக்கலப்பை மண்ணை புரட்டி உபவதற்கு அவசியமாக உள்ளப் பகுதியில் பயன்படுகிறது. வெற்றிக் கலப்பை என்பது எருதுகளைக் கொண்டு உழுவதற்குப் பயன்படும் சிறிய சட்டத்தைக் கொண்ட வளைப் பலகைக் கலப்பை ஆகும்.

"http://www.tamilkalanjiyam.in/index.php?title=வளைப்பலகைக்கலப்பை&oldid=4990" இருந்து மீள்விக்கப்பட்டது