முதற் பக்கம்

தமிழ்ப்பெருங்களஞ்சியத் திட்டம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
பகுப்புகள்

இயற்பியல் இந்துமதம் உயிரியியல் கணிப்பொறியியல் கல்வியியல் தமிழ்ப்_புலவர்கள் தமிழக_ஊராட்சிகள் பயிர்_நோயியல் பூச்சியியல் மின்னணுவியல் மின்னியல் மீன்வளம் விலங்கியல் வேதியியல் விதை_நுட்பவியல் வேளாண்மை

Kanitamilperavailogo thumb1.png

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பரப்புரை அலகான கணித்தமிழ்ப் பேரவை உருவாக்கிவரும் பல்துறைக் களஞ்சியமே தமிழ்ப்பெருங்களஞ்சியம் ஆகும். அனைத்துத் துறைகளிலும், தமிழ் உள்ளடக்கங்களை கலைக்களஞ்சிய வடிவில் உருவாக்குவது இத்திட்டத்தின் முதன்மைப்பணி ஆகும். இத்திட்டம் இணையப்பரப்பில் தமிழை வளப்படுத்தவும், வலுப்படுத்தவும் விரும்பும் தன்னார்வலர்களின் உறுதுணையுடன் செயல்படுகின்றது. தமிழ்ப்பெருங்களஞ்சியத்தில் உள்ள ஆக்கங்கள், படைப்பாக்கப் பொதுமங்கள் (CC BY-SA 4.0) என்னும் உரிமத்தின் கீழ் அளிக்கப்படுகின்றன.

தன்னார்வலர்கள் தங்களின் விருப்பத்துறையில் புதிய கட்டுரைகளை உருவாக்கலாம், முன்னமே உள்ள கட்டுரைகளைத் திருத்தி செம்மைப்படுத்தலாம், கட்டுரைகளுக்குப் பொருத்தமான ஒளிப்படங்கள், காணொலிகள், ஒலிக்கோப்புகள், அசைவூட்டப் படங்கள் போன்றவற்றினைச் சேர்க்கலாம்.

"http://www.tamilkalanjiyam.in/index.php?title=முதற்_பக்கம்&oldid=68573" இருந்து மீள்விக்கப்பட்டது